1. பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
2. தீய ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் ஒரு குழுவினர், மர்மமான சில சதித்திட்டங்களை உடையவர்களாக, மதச்சார்பற்ற ஒரு பொதுவான பெயரில், ஸ்வீடன் தேசத்தில் தங்கள் தலைமையகத்தை நிறுவியிருந்தனர்.
3. அது அந்நாட்டின் தலைநகராகிய ஸ்டாக்ஹோமில் (Stockholm) அழகியதொரு கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. ஸ்வீடனின் இளவரசரான பெர்ட்டில் (Prince Bertil) உட்பட ராஜ குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அக்குழுவினருக்கு ஆதரவளித்து, அவர்களுடன் ஐக்கியம்கொண்டிருந்தனர்.
4. அதினிமித்தம் தங்கள் முழுத் தேசத்தின் மேலும் அக்குழுவினர் ஆதிக்கம் செலுத்த நேரிடும் என்பதையும், அதன் விளைவாகத் தங்கள் தேசம் வெகு அதிகமான பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்பதையும் உணர்ந்த அத்தேசத்தின் மெய்க்கிறிஸ்தவர்கள் பலர் மிகவும் மனவருந்தினர்.
5. செல் ஹ்யோபெக் (Kjell Sjoberg) என்னும் தேவமனிதன் அவர்களில் ஒருவராவார். தேவ வைராக்கியமுள்ளவராயிருந்த அவர், ஆவிக்குரியவர்களான சில வாலிபர்களுடன் சேர்ந்து தங்கள் தேசத்திற்காக மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்கும்படி தீர்மானித்தார். அதற்காக அவர்கள் ஒரு படகில் ஏறி, தங்கள் தலைநகரத்திற்கு அருகிலிருந்த தீவு ஒன்றிற்குச் சென்றனர்.
6. அங்கே அவர்கள் தங்கள் தேசத்தை ஆட்கொள்ள முற்படும் சத்துருவின் மறைவான கிரியைகள் கிறிஸ்துவின் வெளிச்சத்தினால் வெளியரங்கமாக்கப்பட வேண்டுமென்று உபவாசத்துடனும் கண்ணீருடனும் மூன்று நாட்கள் தொடர்ந்து ஜெபத்தில் போராடினர்.
7. மறுநாள் அதிகாலையில் ஸ்டாக்ஹோம் நகரத்திற்குத் திரும்பி வந்த அவர்கள், நேராக அக்குழுவினரின் தலைமையகத்திற்குச் சென்று, அதன் நுழைவாயிலில் நின்று: "இங்கிருக்கும் இருளின் இரகசியக் கிரியைகள் யாவும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் வெளியரங்கமாக்கப்படுவதாக!" என்று கட்டளையிட்டு, பின்பு அவரவர் தங்கள் இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
8. சில நாட்களுக்குப் பின்னர் சம்பவித்தது என்ன தெரியுமா? அக்குழுவினரின் தலைமையகத்திற்கு அடுத்ததாக அமையப்பெற்றிருந்த ஒரு பழைய கட்டடத்தின் உரிமையாளர், அதனை முற்றிலுமாக இடித்துவிட்டு, அங்கு புதிதாகக் கட்டட வேலையைத் தொடங்கும்படி திட்டமிட்டிருந்தார்.
9. ஒரு காலைப்பொழுதில் அப்பழைய கட்டடத்தை வெடிவைத்துத் தகர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, அது அக்கட்டடத்தைத் தகர்ப்பதற்குப் பதிலாக, எதிர்பாராத விதமாகச் சற்று திசைமாறி, நேராக இக்குழுவினருடைய கட்டடத்தினூடாகச் சென்று அதன் உள் அறைகளை வெளியரங்கமாகத் திறந்து காண்பித்துவிட்டது!
அவர்களது புனிதத் தலமாகக் கருதப்பட்டு வந்த அந்த உள் அறை ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மனித எலும்புகளும் மண்டையோடுகளும், அச்சாலையின் வழியாகக் கடந்து சென்ற அனைவரும் காணத்தக்க வெளியரங்கமான காட்சிகளாயின!
இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அன்று நிகழ்ந்த சம்பவம், பல புகைப்படங்களுடன்கூட செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அத்தேசம் முழுவதும் பரவியது. அக்குழுவினர் தங்கள் செயல்களைக் குறித்துப் பதிலளிக்க வேண்டும் என மக்கள் ஆவேசத்துடன் குரல் எழுப்பினர்!
அக்குழுவில் முக்கிய இடங்களை வகித்து வந்த ராஜ குடும்பத்தினர் அக்குழுவை விட்டு விலகினர்! வாணிப உலகத்தில் ஈடுபட்டிருப்பதாக வெளி உலகிற்குத் தோற்றமளித்த அக்குழுவினர், 350 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த இரகசியச் செயல்களைத் தேவன் ஒரே நாளில் உலகறியச் செய்துவிட்டார்! அவை என்றைக்குமாக மறைந்திருக்கவில்லை! ஒரு தேவமனிதனும் தேவவைராக்கியமுள்ளவர்களாயிருந்த சில வாலிபர்களும் செய்த ஊக்கமான ஜெபத்தின் மூலம் இருளில் மறைந்திருந்தவை வெளியரங்கமாயின! அவர்களது தேசம் பாதுகாக்கப்பட்டது!
"உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்." (ஏசாயா 54:17)
சங்கீதம் 91: 5-16 முடிய கர்த்தருடைய வசனம் சொல்கிறது:
5. இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
6. இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
7. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
8. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
9. எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய்.
10. ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
11. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
12. உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
13. சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
14. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
15. அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைத் கனப்படுத்துவேன்.
16. நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
என்று பலமான வாக்குத்தத்தம் நமக்கு இருக்கின்றபடியால், நமக்கு விரோதமாகச் செயல்படும் அனைத்துத் தீய ஆவிகளையும் நம்மால் சுலபமாக விரட்டியடித்து முற்றிலும் ஜெயம் பெற முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மேலும் யோசுவா 1:5, 6:
"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று நமது ஆண்டவர் நம்மைப் பலப்படுத்துகிறார்.
"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று நமது ஆண்டவர் நம்மைப் பலப்படுத்துகிறார்.
பிரியமான தேவ பிள்ளையே,
உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் சூனியம், மாந்திரீகம், தீய ஆவிகளின் போராட்டங்கள் உனக்கு இருக்குமானால், நீ ஒன்றுக்கும் பயப்படாமல் ஜெபத்தில் தொடர்ந்து தரித்திரு. ஏனென்றால் உன்னை உண்டாக்கின வெற்றியின் தேவன் உன்னோடு எப்போதும் இருக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தேவனை மகிமைப்படுத்துங்கள். மேலும் உங்களுக்கு ஜெப உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
Your Prayer Has an Answer!
I would like to share with you a true incident that took place several years ago.
A group of people involved with evil spirits, harboring mysterious and sinister agendas, established their headquarters in Sweden under a secular, common name.
A group of people involved with evil spirits, harboring mysterious and sinister agendas, established their headquarters in Sweden under a secular, common name.
It operated out of a beautiful building in the capital city of Stockholm. Members of the Royal Family, including Prince Bertil of Sweden, supported the group and were in fellowship with them.
Realizing that this group would exert dominance over the entire nation and that the country would suffer severe consequences as a result, many true Christians in that nation were deeply grieved.
Kjell Sjoberg, a man of God, was one among them. Filled with divine zeal, he decided to fast and pray for three days for their nation along with a few spiritual young men. For this purpose, they boarded a boat and went to an island near the capital city.
There, they battled in prayer for three continuous days with fasting and tears, pleading that the hidden works of the enemy attempting to take over their nation be exposed by the Light of Christ.
Returning to Stockholm early the next morning, they went straight to the group's headquarters. Standing at the entrance, they commanded: "Let all the secret works of darkness here be exposed in the name of the Lord Jesus!" After this, they returned to their respective places.
Do you know what happened a few days later? The owner of an old building located right next to the group's headquarters had planned to demolish it completely to begin new construction.
One morning, when the old building was being demolished using explosives, instead of just leveling that building, the blast unexpectedly diverted its force. it tore straight through the headquarters of this group, exposing its inner rooms to the public!
Inside one of the inner chambers, which they considered their "holy shrine," hundreds of human bones and skulls were found. It became a public spectacle for everyone passing by on the street!
The public was shocked. The incident spread throughout the nation via newspapers and media, accompanied by many photographs. People raised their voices in outrage, demanding that the group be held accountable for their actions!
The Royal Family members, who held prominent positions in the group, immediately withdrew! What appeared to the outside world as a business entity was actually a cover for 350 years of secret activities—which God exposed in a single day! They did not remain hidden forever. Through the fervent prayer of one man of God and a few zealous young men, that which was hidden in darkness was brought to light. Their nation was protected!
"No weapon formed against you shall prosper, and every tongue which rises against you in judgment you shall condemn. This is the heritage of the servants of the Lord, and their righteousness is from Me,” says the Lord. (Isaiah 54:17)
Psalm 91: 5-16 says:
5. You shall not be afraid of the terror by night, nor of the arrow that flies by day,
5. You shall not be afraid of the terror by night, nor of the arrow that flies by day,
6. Nor of the pestilence that walks in darkness, nor of the destruction that lays waste at noonday.
7. A thousand may fall at your side, and ten thousand at your right hand; but it shall not come near you.
8. Only with your eyes shall you look, and see the reward of the wicked.
9. Because you have made the Lord, who is my refuge, even the Most High, your dwelling place,
10. No evil shall befall you, nor shall any plague come near your dwelling;
11. For He shall give His angels charge over you, to keep you in all your ways.
12. In their hands they shall bear you up, lest you dash your foot against a stone.
13. You shall tread upon the lion and the cobra, the young lion and the serpent you shall trample underfoot.
14. “Because he has set his love upon Me, therefore I will deliver him; I will set him on high, because he has known My name.
15. He shall call upon Me, and I will answer him; I will be with him in trouble; I will deliver him and honor him.
16. With long life I will satisfy him, and show him My salvation.”
Since we have such powerful promises, there is no doubt that we can easily drive away all evil spirits acting against us and gain total victory.
Dear Child of God,
If you are facing struggles from witchcraft, sorcery, or evil spirits formed against you, do not be afraid. Continue to persist in prayer because the God of Victory who created you is always with you.
Dear Child of God,
If you are facing struggles from witchcraft, sorcery, or evil spirits formed against you, do not be afraid. Continue to persist in prayer because the God of Victory who created you is always with you.
Beloved in Christ, if this
post has blessed you, give glory to God. Furthermore, if you need prayer support, please contact us. May the Lord bless you!
0 Comments